முதல்வருடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: கலைஞர் கடிதத்தின் வாயிலாக உலக அரசியலை, தேசிய அரசியலை, தமிழக அரசியலை எளிய வடிவில் மக்களுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றார். முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து குடியரசு தலைவர் அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்கு எந்த பதிலும் வரவில்லை. நியாயமான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு நிராகரித்தவரை, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறக்க அழைத்துள்ளார். பெண்களை நிராகரித்து அபசகுனம் என்று அவமரியாதையாக என்று குறிப்பிடுபவர்களுக்கு எதிரான திசையில் சொல்ல முடியும் என அவரை அழைத்துள்ளார்.

9 நாட்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு பல முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ள முதலமைச்சரை பாராட்டுவதற்கு பதிலாக ஆளுநர் வேறு விதமாக பேசுகிறார். அவருக்கு வெயில் காலம் என்பதால் அவ்வாறு பேசுகிறாரா என தெரியவில்லை. இவ்வாறு பேசுக்கொண்டு இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் விரட்டி அடிக்கக்கூடிய நிலை ஏற்படும். கலைஞரின் லட்சியம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் பாடுபடுகிறார். அவருக்கு உறுதுணையாக நின்று இணைந்து போராடி தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதல்வருடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: