வல்லமைமிக்க ஒரு மாபெரும் ஆளுமைதான் கலைஞர்: திருமாவளவன் பேச்சு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: வல்லமைமிக்க ஒரு மாபெரும் ஆளுமை தான் கலைஞர். அவர் ஆற்றிய சாதனைகள். சில மணித்துளிகளில் அடுக்கி விட முடியாது. சமூகத்தில் பரவிக் கிடக்கிற சனாதானத்தை தகர்க்க, கலைஞர் அதற்காக திமுக என்ற கருவியை பயன்படுத்தி கொண்டார். கலைஞர் எத்தனை சாதனைகளை செய்திருந்தாலும் என்றென்றும் நிலைத்து நிற்க கூடிய சாதனை, சமத்துவபுரமும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும்தான். இந்திய சமூக கட்டமைப்பு என்பது சாதிவாரியாக இருக்கிறது. வர்ணாசிரமம் என்ற அடிப்படையில் இருக்கிறது, இன்று எழுந்துள்ள கருத்தியல் போர் மாநில அரசுகள் இப்போது தான் குமுற தொடங்கியுள்ளன. மத்தியில் அதிகாரத்தை குவிக்கிறார்கள். ஒரே ஆட்சி என்கிறார்கள்.

இந்த நேரத்தில் தேசிய தலைவர்கள் எல்லாரும் ஒரு தலைவரை நினைவுகூறுகிறார்கள் என்றால் அந்த பெருமை குரிய தலைவர் கலைஞர். அரசியலில் எத்தனை சாதனைகள் புரிந்தாலும் அவருடைய தொலை நோக்கு பார்வை தான் கலைஞரின் திறமை. தலைவர் கலைஞரின் பிறந்த நாளை மாநில சுயாட்சி நாள் என்று அறிவிக்க வேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள். ஒடிசாவில் நடந்த விபத்தால் உடனே மாநாட்டை ஒத்தி வைத்த அந்த பண்பு கலைஞரின் பண்பை அப்படியே முதல்வரிடம் இடத்திலேயே இருப்பதை பார்க்க முடிகிறது. மக்களிடம் அன்பு, கருணை, இரக்கம், நேசம் எல்லாம் அவரிடம் இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

The post வல்லமைமிக்க ஒரு மாபெரும் ஆளுமைதான் கலைஞர்: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: