கொங்கண் பாதையில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: ஜூன் 10 முதல் அமலுக்கு வருகிறது

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு: பருவமழைக்காலம் தொடங்குவதால் கொங்கண் பாதையில் இயக்கப்படுகின்ற 24 ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை இது அமலில் இருக்கும். ரயில் எண் 20923 திருநெல்வேலி ஜங்ஷன்-காந்திதாம் ஜங்ஷன் வாராந்திர ஹம்சபார் சூப்பர் பாஸ்ட் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் 45 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 19577 திருநெல்வேலி ஜங்ஷன்- ஜாம்நகர் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுவது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஜாம் நகருக்கு காலை 4.25 மணிக்கு சென்றடையும். ரயில் எண் 19578 ஜாம்நகர்- திருநெல்வேலி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஜாம்நகரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்புக்கு மாலை 6.20க்கு பதில் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக இரவு 10.05 மணிக்கு வந்து சேரும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொங்கண் பாதையில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: ஜூன் 10 முதல் அமலுக்கு வருகிறது appeared first on Dinakaran.

Related Stories: