விடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில், விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகம் காணப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஞாயிறு விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட அதிகம் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அதிகாலை திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் பின்னர் கடலில் புனித நீராடி பகவதியம்மன் கோயிலில் அம்மனை தரிசனம் செய்தனர்.

Advertising
Advertising

கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு சேவை மூலம் ஏராளமானோர் பார்வையிட்டனர். இதுபோல் காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், காட்சிகோபுரம் பகுதிகளை பார்வையிட்டனர். மாலை சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்தனர் பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: