எம்ஜி நிறுவனம், புதிய கிளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.40.3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 சீட் மற்றும் 7 சீட் கொண்ட 2 வீல் டிரைவ் விலை சுமார் ரூ.40.3 லட்சம். 6 முதல் 7 சீட் கொண்ட ஆல் வீல் டிரைவ் சுமார் ரூ.43.08 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7 அல்லது 8 சீட் கொண்ட சாவி வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.41.77 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெயருக்கேற்ப, கருப்பு நிறத்தில் உள்ள இந்த எஸ்யுவி, கருப்பு அலாய் வீல்கள், உட்புறம் கருப்பு வடிவமைப்பு என அசத்தலாக அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் சிங்கிள் டர்போ சார்ஜர் மற்றும் டூயல் டர்போ என 2 வேரியண்ட்கள் உள்ளன. சிங்கிள் டர்போ சார்ஜர் இன்ஜின் அதிகபட்சமாக 161 பிஎஸ் பவரையும், 374 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், இதுபோல் டூயல் டர்போ வேரியண்ட் 216 பிஎஸ் பவரையும் 479 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
The post எம்ஜி கிளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் appeared first on Dinakaran.