வலை வீசும் உடைகள்!

சம்மர் ஃபேஷன்

எக்காலத்துக்கும் ஏத்தவை இந்த வலை மெட்டீரியல்கள். அதிலும் கோடை எனில் கேட்கவா வேண்டும். காற்றோட்டமாக, கொஞ்சம் கனம் குறைவாக என வலை போன்ற துணிகளில் உடை தைத்துக்கொள்ள யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் வலை மெட்டீரியல்களில் உடைகள் டிசைன் செய்து அணிந்தாலே சர்வ சாதாரணமாக கிராண்ட் லுக் கொடுத்துவிடும். ஆனால் அதே சமயம் மெட்டீரியல்களின் தேர்வு தவறானால் அதே வலை நம்மை அரித்து, எரித்து ஒரு காட்டுக் காட்டிவிடும். கோடை காலத்தில் வலைகளில் உடைகள் எப்படி பயன்படுத்தலாம், என்ன டிப்ஸ் சொல்கிறார்கள் நீதி
சோர்டியா, ஷாமினி, ரத்னா மற்றும் சதீஷ் குமார்.

நிதி சோர்டியா
(ஃபேஷன் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட்)

வலை மெட்டீரியல்களை பொருத்தவரை கொஞ்சம் லேசான, அதே சமயம் நைலான் இல்லாத அல்லது மிகக் குறைந்த நெட் மெட்டீரியல்களைப் பயன்படுத்தினால் நல்லது. இங்கே ஷிவானி நாராயணனுக்கு நாங்கள் பயன்படுத்தியிருக்கறது சாஃப்ட் நெட் துணிகள்தான். பொதுவாக உடைகள்ல அதிகம் பயன்படுத்துறது ‘டுல்’ (tulle) துணிதான். அதுதான் கனம் குறைவாகவும், சருமத்தை உறுத்தாமலும் இருக்கும். மேலும் இங்கே சம்மர்ன்னாலே பட்டர்ஃபிளைகள்தான் நம்ம கண்களுக்குப் புலப்படும், அதனாலேயே பட்டர்ஃபிளை பேட்ச் நான் நிறைய சேர்த்திருப்பேன். போலவே அதிகம் கறுப்பும் சம்மரில் ஆகாது. அதனால் உடையைக் கட் செய்கிற டெனிம் பாட்டம் அதற்கு மேட்சிங்கா மேலேயும் அதிகம் நெட் துணி வருகிற மாதிரி ஜாக்கெட், உள்ளே ஒரு கிராப் டாப் கொடுத்திருப்போம். வெள்ளை நிறம்தான் சம்மர் நிறம்ன்னே சொல்லலாம். அதனால் என்ன வேண்டுமானாலும் சம்மர் ஃபேஷனில் வெள்ளை நிற உடைகளில் கலக்கலாம். அதிலும் இங்கே வெள்ளை நிற நெட் மெட்டிரியலில் ஷிவானிக்கு சூட் அமைச்சிருக்கோம். மேலும் சின்ன சின்ன இழைகள் மாதிரியும் இணைச்சிருப்போம். பார்க்க ஒரு வெள்ளைநிற பறவை மாதிரியான ஒரு லுக் கிடைக்கும்.

ஷாமினி  சங்கர்
(ஃபேஷன் கான்செப்ட் இயக்குநர்)

வெயில் காலங்கள்ல அதீத கனமான ஆக்ஸசரிஸ் பயன்பாடு கொஞ்சம் எரிச்சலா இருக்கும், அல்லது உறுத்தும். அதனாலேயே கறுப்பு நிற உடையில் நாங்க எங்க நகைகளும், ஏன் தோடு கூட பயன்படுத்தியிருக்க மாட்டோம். வெள்ளை நிற உடையில்தான் ஓரளவு கொஞ்சம் வெப்பம் இழுக்காது என்கிறதால் கழுத்துக்கு மட்டும் அக்ஸசரிஸ் கொடுத்திருப்போம். காரணம் அதீத நகைகளும் உலோகப் பயன்பாடும் கூட கோடைகாலத்தில் எரிச்சலை உண்டுபண்ணலாம் அல்லது வெப்பத்தை ஈர்க்கலாம் என்பதால் குறைந்த நகைகள் மட்டுமே ஷிவானிக்குப் பயன்படுத்தி இருப்போம், அல்லது நகைகளே இல்லாமல் ஸ்டைலிங் கொடுத்திருப்போம். பயன்படுத்துவதைக் காட்டிலும் அதீத கவனம் அதைப் பராமரிப்பதில்தான் இருக்கு. டிரை க்ளீன் கொடுத்து சரியான கவர் போட்டு தனியாக வைப்பது நல்லது. முடிந்தால் எப்படி பட்டுப் புடவைகள், எம்பிராயடரி, ஜமிக்கி உடைகளை ஹேங்கரில் மாட்டித் தொங்கவிடுகிறோமோ அதே பாணியில் தொங்கவிடுவது இன்னும் சிறப்பு. பொதுவாக நெட் மெட்டிரியல்களில் சுருக்கங்கள் விழாது, ஒருவேளை உண்டானால் அயன் செய்யும்போது பாக்ஸ் ஹீட்டை கூடுமானவரை குறைத்து அல்லது கரெண்ட் கனெக்சனை எடுத்துவிட்டு இருக்கும் வெப்பத்திலேயே அயன் செய்வது இன்னும் நல்லது. மேக்கப் எப்படி அமைந்தால் சம்மருக்கு நல்லது தொடர்ந்தார் மேக்கப் ஆர்டிஸ்ட் ரத்னா.

ரத்னா (மேக்கப் ஆர்டிஸ்ட்)

எவ்வளவுதான் பெரிய பிராண்ட் புராடெக்ட் பயன்படுத்தி மேக்கப் போட்டுக் கொண்டாலும் அடிக்கும் வெயிலுக்கு உடனே வியர்த்து வழிந்து விடும், அல்லது கேக் போன்ற லுக் கொடுத்துவிடும், இன்னும் சிலருக்கு முகம் கிரே நிறத்தில் மாறுவதும் உண்டு. கோடைகாலத்தில் அதீத மேக்கப் ஒன்று இரண்டு மணி நேரத்திலேயே உருகி வழிந்துவிடும் பிரச்சனை இருப்பதால்
மேக்கப் குறைத்துக் கொள்வது நல்லது.

– ஷாலினி நியூட்டன்
மாடல்: நடிகை ஷிவானி நாராயணன்
படங்கள்: எஸ். சதீஷ் குமார்

The post வலை வீசும் உடைகள்! appeared first on Dinakaran.

Related Stories: