இந்திய துணை ராணுவப்படையில் வேலை

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய துணை ராணுவப் படையான சாஸ்த்ரா சீமா பால் படையில் 141 எஸ்ஐ பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1Sub-Inspector (Pioneer): 20 இடங்கள் (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1). வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/டிப்ளமோ தேர்ச்சி.
2Sub- Inspector (Draughtsman): 3 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு வருட ஆட்டோகாடில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3Sub-Inspector (Draughtsman): 59 இடங்கள் (பொது-34, பொருளாதார பிற்பட்டோர்-5, ஒபிசி-9, எஸ்சி-6, எஸ்டி-5). வயது: 30க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங்/சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,
4Sub-Inspector Female (Staff Nurse): 29 இடங்கள். (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-6, எஸ்டி-1). வயது: 21 லிருந்து 30க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஜெனரல் நர்சிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.35,400-1,12,400. எழுத்துத் தேர்வு/ திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்னலைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

துணை மருத்துவ பணிகள்
5ASI (Pharmacist): 7 இடங்கள் (எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-1). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி.
6ASI (Radiographer): 21 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்டி-1, எஸ்டி-3). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Radio Diagnosis பாடத்தில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
7ASI (Operation Theater Technician): 1 இடம் (பொது). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
8ASI (Dental Technician): 1 இடம் (பொது). தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் Dental ygienist பாடத்தில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 20 லிருந்து 30க்குள். எழுத்துத்தேர்வு/ திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2023

The post இந்திய துணை ராணுவப்படையில் வேலை appeared first on Dinakaran.

Related Stories: