முன்விரோத தகராறில் 2 பேர் கைது

திருக்கோவிலூர், ஜூன் 7: திருக்கோவிலூர் அடுத்த ஓட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(53). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழரசன்(30) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று விவசாய நிலத்திற்கு பழனிவேல் நடந்து செல்லும் போது அவ்வழியாக வந்த தமிழரசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தமிழரசன், பழனிவேல் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

The post முன்விரோத தகராறில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: