அலங்கார வேலைகள் செய்வதை தவிர்த்துவிட்டு ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

 

கோவை, ஜூன் 7: கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (எச்.எம்.எஸ்), என்.டி.சி ஸ்டாப் யூனியன் மற்றும் கோவை மண்டல கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சிங்காநல்லூரில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. எச்.எம்.எஸ். மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி தலைமை தாங்கினார். இதில், ஒடிசா ரயில் விபத்தில் பலியான 278 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், “ஒன்றிய அரசு வண்ண வண்ண கலர்களில் ரயில்களை அலங்கரிப்பதையும், புதிய ரயில்கள் விடுவதையும்விட, ரயில் பயணிகள் உயிரை கருத்தில்கொண்டு, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பொருளாளர் ஜி.மனோகரன், செயலாளர்கள் எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், துணை தலைவர்கள் ஆர்.பத்மநாபன், ஆர்.தங்கவேலு, உதவி செயலாளர் வி.கே.தங்கராஜ், அமைப்பு செயலாளர்கள் தென்றல் நாகராஜ், எஸ்.ஆர்.சண்முகம், என்.நாகராஜ், ஸ்டாப் யூனியன் தலைவர் கே.பழனிசாமி, கட்டுமான சங்க செயல்தலைவர் எம்.பழனிசாமி, பொருளாளர் எம்.பழனிசாமி, செயலாளர்கள் இ.ஆனந்தராஜ், பி.காளிமுத்து, கே.கருப்புசாமி, எம்.ரவீந்திரன் என்கிற கமல் ரவி, எம்.ராஜாமணி, டி.பாலசுப்பிரமணியம், கே.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அலங்கார வேலைகள் செய்வதை தவிர்த்துவிட்டு ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: