வேளாண் பல்கலையில் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு

 

கோவை, ஜூன் 7: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதுநிலை பட்டமேற்படிப்பு வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலை படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்ட படிப்பையும் வழங்குகிறது. இந்நிலையில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஏப்ரலில் துவங்கியது. ஆன்லைன் மூலம் முதுகலை படிப்பிற்கு 2,235 மாணவர்கள், முனைவர் படிப்பிற்கு 448 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, வேளாண் தோட்டக்கலை முதன்மையர் ஐரின் வேதமோனி, மாணவர் நல மையத்தின் முதன்மையர் மரகதம் மேற்பார்வையில் நடந்தது. நுழைவு தேர்வில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்காளம், மகராஷ்டிரா, தெலுங்கனா, கேரளா, பீகார், இமாசல் பிரதேசம், ஒடிசா, புதுசேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நடப்பு இறுதியாண்டு பருவம் முடிந்தவுடன் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் சேர்க்கபட உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வேளாண் பல்கலையில் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: