சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கலையரங்கில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்: தமிழகத்தில்மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மஞ்சப்பை விருது என்ற புதிய விருதை தங்கள் வளாகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குள் மீதான தடையை அமல்படுத்தி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்பை செய்த 92 தனிநபர்கள், தொழற்சாலைகள், நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகள் சான்றிதழுடன் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 3 சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: