தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, திருப்பத்தூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (05.06.2023) மாலை 05:30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 05:30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

* சென்னையில் மழை

இந்நிலையில் காலையில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்த நிலையில் தபோது மழை பெய்ய தொடங்கியுள்ளது. இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் 2-வது நாளாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வெப்ப அலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சேப்பாக்கம், எழும்பூர, மெரினா, புரசை, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்ஆர்சி நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. திடிரென பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

 

 

 

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: