அழகாக இல்லை என்று கூறி சித்ரவதை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அரூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி (40). அவரது மனைவி நீது (33). கடந்த 2011ம் ஆண்டு 2 பேருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அழகாக இல்லை என்று கூறி நீதுவை உண்ணி அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்த சமயங்களில் நீது அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். அதன் பிறகு உண்ணி அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஆனால் அதன் பிறகு மீண்டும் நீதுவை உண்ணி அடித்து சித்ரவதை செய்து வந்து உள்ளார்.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக நீதுவுக்கு உண்ணி உணவு கூட கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்ல பாடப் புத்தகங்கள் மற்றும் பொருட்களையும் அவர் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நீது நேற்று வீட்டில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் அரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து நீதுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நீதுவின் பெற்றோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து உண்ணியை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை சேர்த்தலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post அழகாக இல்லை என்று கூறி சித்ரவதை இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது appeared first on Dinakaran.

Related Stories: