திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி மாசு காட்டுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

*இணை கலெக்டர் பேச்சு

திருப்பதி : திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதில் இணை கலெக்டர் கலந்து கொண்டு மாசு காட்டுப்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டும் என பேசினார்.திருப்பதி எஸ்வி கலைக் கல்லூரி வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்கள், என்சிசி மாணவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், மருத்துவ சுகாதாரத் துறை மற்றும் அரசுத் துறைகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வுப் பேரணியை இணை கலெக்டர் பாலாஜி, கூடுதல் எஸ்பி குலசேகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் பாலாஜி காலனி, டவுன் கிளப் வழியாக ராமச்சந்திரா புஷ்கரிணி வரை பேரணி நடைபெற்றது.அப்போது இணை கலெக்டர் பாலாஜி பேசுகையில், சுற்றுச்சூழல் குறித்து இப்போதே மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், வருங்கால சந்ததியினருக்கு அநீதி இழைத்தவர்களாகி விடுவோம். பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டை குறைக்க பொதுமக்கள் பொது போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கோவிட் காலத்தில் மாசு கட்டுப்படுத்தப்பட்டதை நாம் உணர வேண்டும்’ என கூறி
னார்.

கூட்ட முடிவில், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழலை உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் இ.இ.நரேந்திரன், என்சிசி 29 ஆந்திரா பட்டாலியன் கர்னல் சிவராஜ், வீரபத்ரம், மண்டல அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் சீனிவாச நேரு, பேராசிரியர் தாமோதரம், ராமாராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி மாசு காட்டுப்பாட்டை குறைக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: