உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செம்மொழி பூங்கா எதிரே ₹1000 கோடி சொத்துகள் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செம்மொழி பூங்கா எதிரே உள்ள ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நில நிர்வாக ஆணையரால் விசாரணை செய்யப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தொடர்ந்து, சென்னை மாவட்டம், மயிலாப்பூர் வட்டம் மற்றும் கிராமம், பகுதி எண் 3, நகர புல எண் 64pt, பழைய புல எண் 3412, விஸ்தீரணம் 04 காணி 18 கிரவுண்ட் 1683 சதுரடி (6.32 ஏக்கர்ஸ்) சர்க்கார் புறம்போக்கு என வகைபாடு கொண்ட நிலம் நேற்று வருவாய்த் துறையினரால் சுவாதீனம் எடுக்கப்பட்டது. இதன் வழிகாட்டி மதிப்பு சுமார் ரூ.533 கோடி மற்றும் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1000 கோடி ஆகும்.இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடம் சென்னையின் இதயப் பகுதியான அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள செம்மொழிப் பூங்கா எதிரே தோட்டக்கலைக்குச் சொந்தமான இடம், தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இந்த இடத்தை அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அரசு தற்போது நிலத்தை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உச்ச நீதிமன்ற உத்தரவின்படி செம்மொழி பூங்கா எதிரே ₹1000 கோடி சொத்துகள் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: