சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் ஒன் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.45 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 750 வாட்ஸ் சார்ஜருடன் விலை சுமார் ரூ.1.58 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டூயல் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 4.5 கிலோவாட் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 72 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 2.77 நொடிகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை எட்டும். எக்கோ, ரைட், டேஷ் மற்றும் சோனிக் என்ற 4 வித டிரைவிங் மோட்கள் உள்ளன.

மோட்டார் மற்றும் பேட்டரிக்கு 3 ஆண்டு அல்லது 30,000 கிலோ மீட்டர் வாரண்டியும், சார்ஜருக்கு ஓராண்டு அல்லது 10,000 கி.மீவாரண்டியுமு் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏதர் 450 எக்ஸ், ஓலா எஸ்1 புரோ ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் ஆண்டு அறிவிப்பு செய்து, ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகே சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு 18 மாதம் முன்பே துவங்கி விட்டது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்தவர்களுக்கு வாகன டெலிவரி ஜூன் 6ம் தேதி துவங்கும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Related Stories: