பொற்பனைக்கோட்டை அகழாய்வுதளத்தில் தொல்லியல், கல்வெட்டியல் மாணவர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், அகழிகளும் உள்ளன. இப்பகுதியில் மிகவும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் ஏராளம் கிடைத்ததுடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான கட்டமைப்பும் உள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2021-ல் இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அகழாய்வு பணிகள் தொடங்கி சுமார் 1.5 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டுள்ள நிலையில் பலவகையான பானை ஓடுகள் மற்றும் பாசி, மணிகள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து பல நாட்களாக நடந்த அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்திய மண் கின்னங்கள், கின்னங்களின் மேல் மூடி குமிழ், பெண்கள் விளையாடிய வட்ட சில் போன்ற பல சுடுமண் பொருட்கள் கிடைத்தன.

இதனையடுத்து இப்பகுதியை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அகழாய்வுசெய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பொற்பனைக்கோட்டையை அகழாய்வுசெய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதidயடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வு செய்த முடிவு செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த 20 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைகோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது.

இந்தப் பணியை தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக் கோட்டையில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக அண்மையில் தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கல் கட்டுமானங்கள் வெளிக்கொணரபட்டது. மேலும் இந்த செங்கல் கட்டுமானம் 07 முதல் 19 செ.மீ ஆழத்தில் செங்கல் அமைப்பு வெளிப்படுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் ஈராண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயம் ஆகிய பட்டயங்களில் பயின்று வரும் 29 மாணவர்களுக்கு மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் என்ற பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் குறித்து தஞ்சாவூர் மணிமண்டபத்திலுள்ள ராஜராஜன் அகழ்வைப்பகத்தில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று (4ம் தேதி) புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்தளத்திற்கும் மாணவர்களை அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலர்களான முனைவர் இரா.சிவானந்தம், துணை இயக்குநர், கி.பாக்கியலட்சுமி, தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர், த. தங்கதுரை, அகழாய்வு இயக்குநர், செல்வி சாய்பிரியா, உமையாள், தொல்லியல் அலுவலர்கள், செந்தில்குமார், இரசாயனர் ஆகியோர் இருந்தனர் .

The post பொற்பனைக்கோட்டை அகழாய்வுதளத்தில் தொல்லியல், கல்வெட்டியல் மாணவர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: