உடுமலை, ஜூன் 5: பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால் பாலக்காடு- திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதே வழித்தடத்தில் சென்னைக்கும் ரயில் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாகம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் செல்வதற்காக பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
இதனால் உடுமலை ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் செல்ல இடம் கிடைக்காமல் பயணிகள் நெருக்கியடித்து நின்று கொண்டே செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் அவதிப்படுகின்றனர்.பலர் கூட்டம் காரணமாக ஏற முடியாமல் பயணத்தை ரத்து செய்துவிடுகின்றனர்.எனவே, திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் அல்லது கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழித்தடத்தில் திருச்செந்தூருக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
The post பாலக்காடு- திருச்செந்தூர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா? appeared first on Dinakaran.