சான்றிதழ் சரியாக பதிவேற்றம் செய்யாத குரூப்-4 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு: இன்று முதல் 7ம் தேதி வரை திருத்தலாம்

சென்னை: குரூப்-4 தேர்வு சான்றிதழ் சரியாக பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சரிபார்ப்புக்கு பின்னர் சில முழுமையாக பதிவேற்றம்/ குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 5ம் தேதி(இன்று) முதல் வரும் 7ம் தேதி மாலை 5.45 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சான்றிதழ் சரியாக பதிவேற்றம் செய்யாத குரூப்-4 தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இறுதி வாய்ப்பு: இன்று முதல் 7ம் தேதி வரை திருத்தலாம் appeared first on Dinakaran.

Related Stories: