பதவியை ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை; எங்கும் செல்லவில்லை; இங்கு தான் இருக்கிறேன்!: ரயில்வே அமைச்சர் பேட்டி

பாலசோர்: ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிவந்த நிலையில், அவர் தான் எங்கும் செல்லவில்லை என்றும் இங்குதான் இருப்பதாக கூறியுள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அதேநேரம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. நிவாரண உதவிகள் வழங்க வேண்டிய நேரமாகும். என்னை ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்துவதாக கூறுகின்றனர். என்னுடைய முழு கவனமும், மீட்புப்பணியில் தான் உள்ளது. நான் எங்கும் செல்லவில்லை, நான் இங்கேயே இருக்கிறேன். மீட்பு பணி மிக வேகமாக நடந்து வருகிறது.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம். விசாரணை அறிக்கையை அடுத்த 15 முதல் 20 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளைத் தடுக்கும் ‘சுரக்ஷா கவாச் சிஸ்டம்’ என்பது ரயில் விபத்துகளைத் தடுப்பதற்கான உபகரணம் இல்லை. இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வரட்டும், எல்லாம் விசயங்களுக்கும் அப்போது பதில் கிடைத்துவிடும். இதுபோன்ற நேரங்களில் மனித தன்மை தான் முக்கியம். அதனால் எங்களது முழு கவனமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் உள்ளது’ என்று கூறினார்.

The post பதவியை ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை; எங்கும் செல்லவில்லை; இங்கு தான் இருக்கிறேன்!: ரயில்வே அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: