15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 51 வயது உறவினருக்கு வலை

செய்யாறு: செய்யாறு அருகே 15 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 51 வயது உறவினர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தற்போது 10ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். மாணவியின் பெற்றோர், குடும்ப சூழல் காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாணவி தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மாணவியின் பெரியப்பா உறவுமுறையான அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(51) என்பவர், கடந்த ஜனவரி மாதம் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தொடர்ந்து பலமுறை மாணவியை பயமுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் மாணவிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரது தாய், மகளை வீரம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் விசாரித்தபோது, பெரியப்பா உறவுமுறையான கார்த்திக்தான் காரணம்.

The post 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய 51 வயது உறவினருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: