கிணற்றில் குளித்த மாணவன் பலி

சின்னசேலம், ஜூன் 4: கள்ளக்குறிச்சி அருகே அக்கராயபாளையம் புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி(35). இவரது கணவர் பலராமன். இவர்களுக்கு இரண்டு மகன்கள். பலராமன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் ஜெயராணி தனது 2 மகன்களுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். அவரது இளைய மகன் கனல்கண்ணன்(15) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மேல்நிலை கல்வி பயில இருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளித்து விட்டு வருவதாக கூறிச்சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தபோது சாலையோர கிணற்றின் அருகில் அவர் அணிந்திருந்த துணிகள் கிடந்தது. இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் துணையுடன் கிணற்றில் தேடி கனல்கண்ணனை சடலமாக மீட்டனர். இது குறித்து அவரது தாய் ஜெயராணி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கனல்கண்ணன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கிணற்றில் குளித்த மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: