தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் கோர விபத்துக்கு யார் காரணம்? ‘கவாச்’ தொழில் நுட்பத்தை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என ஆ.ராசா எம்.பி குற்றச்சாட்டு

சென்னை: தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் இந்த கோர விபத்து நடந்ததற்கு யார் காரணம்? கவாச் தொழில் நுட்பத்தை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: உலகை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் இறப்பு எண்ணிக்கை 290 தாண்டி அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. தொழில் நுட்பம் வளர்ந்த பிறகும் இந்த கோர விபத்து நடந்ததற்கு யார் காரணம்? சிஸ்டமா, தனி மனிதனா? சிஸ்டம் கோளாறு என்றால் என்ன கோளாறு? தனிமனிதன் என்றால் யார் என்பதை தெரிவிக்க வேண்டும். ரயில்வே அமைச்சகம் போதிய கவனம் செலுத்தியிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. ரயில்வே அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டே, மம்தா பானர்ஜி எங்களுடைய ஆட்சி காலத்தில் ஐக்கிய முன்னணி இருந்த போது தீக்காஷ் என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம்.

அதில் எங்களுக்கு பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக உங்களுடைய ஆட்சி வந்த பிறகு கவாச் என்று மாற்றீனர்கள். அதை பொருத்துவதற்கு நிதி ஒதுக்கினீர்கள். இந்தியாவில் 70 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில்வே பாதை உள்ளது. அதில் 1500 கி.மீ தான் இந்த கவாச் கருவியை பொருத்தியிருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். அதற்கு அவர் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இதுவரை பிரதமர் மோடி, இதுபோன்ற சம்பவங்களில் அதிமுக, பாஜக அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்து கொள்கிறோம். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு ரயில்வே துறையில் கல்வியை அடிப்படையாக வைத்து வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

The post தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும் கோர விபத்துக்கு யார் காரணம்? ‘கவாச்’ தொழில் நுட்பத்தை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்தவில்லை என ஆ.ராசா எம்.பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: