அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பயோ மெட்ரிக் முறையில் விவசாயிகள் விரல் ரேகை பதிவு: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவள்ளூர் மாவட்டத்தில் கேஎம்எஸ் – 2022 – 2023 நவரை பருவத்தில் 64 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய்யும்போது பயோமெட்ரிக் முறையில் 1.6.2023 முதல் கொள்முதல் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லினை காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு ஒடிபி பெறுவதன் மூலம் விவசாயிகளின் விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயிகளின் சுய விபரங்கள் சரியாக இருக்கிறதா என கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பயோ மெட்ரிக் முறையில் விவசாயிகள் விரல் ரேகை பதிவு: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: