இரும்புப் பெட்டிகளைப் போலவே இதயக்கூடும் நொறுங்கிவிட்டது :கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் அஞ்சலி

சென்னை: இரும்புப் பெட்டிகளைப் போலவே இதயக்கூடும் நொறுங்கிவிட்டது என்று, ஒடிசா ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை பதிவு ஒன்றை இட்டுள்ளார்,

அதில்..

“இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது

பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்

மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்

இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்

கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது,”

எனத் தெரிவித்துள்ளார்.

The post இரும்புப் பெட்டிகளைப் போலவே இதயக்கூடும் நொறுங்கிவிட்டது :கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: