இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் கைது

கடலூர், ஜூன் 3: கடலூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். திருமணமானவர். ஐந்து வயதில் மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவரது அத்தை மகன் லோகேஷ் (19) என்பவர், ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் இளம்பெண் வசித்து வரும் நிலையில், அத்தை மகன் லோகேஷ் உடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாத கர்ப்பிணியான இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி லோகேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்துள்ளார். மேலும் லோகேஷின் தாய் சாந்தா எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பெண், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து லோகேஷை கைது செய்தனர். அவரது தாய் சாந்தாவை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: