பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் இன்று காலை ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. குத்தம்பாக்கம் 4 சாலை சந்திப்பு அருகே மினி சரக்கு லாரி திடீர் பிரேக் போட்டது. இதனால் பின்னால் வேகமாக வந்த 2 வேன்கள், கம்பெனி ஊழியர்களை ஏற்றி சென்ற ஒரு தனியார் பஸ் உள்பட 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியது. 5 வாகனங்களில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். 5 வாகனங்களையும் கிரேன் உதவியால் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்; 10 பேர் காயம் appeared first on Dinakaran.