கோடை பழங்களும் அதன் பயன்களும்!

சீசனுக்குக் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும் எனப் பெரியோர்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி இந்தியாவில் கோடையில் மட்டுமே கிடைக்கும் பழங்கள் மற்றும் அதன் பயன்கள் இதோ!

தர்பூசணி

நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். தர்பூசணி உடலின் நீரின் அளவை கட்டுக்குள் வைத்திருந்து வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை சீர் செய்யும். பெரும்பாலும் மாலையில் தர்பூசணி அருந்துவதை தவிர்க்கவும். காரணம் தர்பூசணியில் நீர்ச்சத்தும், நீரும் அதிகம் இருப்பதால், இரவில் படுக்கும் போது அதிக நீர் மேலே எழும்பி, ஒருவித குமட்டலை உண்டாக்கலாம்.

முலாம்பழம்

முலாம்பழம் கோடையில் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான பழம். அதிக நீர் மற்றும் காரத்தன்மையுடன், உங்கள் சுவை மொட்டுகளுக்கு விருந்தளிக்கும். கோடையில் எப்போது உடலின் நீர் சமநிலையை சீராக வைத்திருக்கும். உடலை உள்ளிருந்து குளிர்விக்க உதவுகின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக் கிறது. இது தீவிர வெப்பநிலையின் அமில விளைவுகளை அகற்ற உதவுகிறது.

நுங்கு

நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு – இரண்டுக்குமே நுங்கு மருந்தாக பயன்படுகிறது.

பிளம்ஸ்

பிளம்ஸ் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த, பிளம்ஸ் இந்தியாவில் கோடைகாலத்தில் கிடைக்கும் அருமையான ஒரு பழம். அதிகளவில் நார்ச்சத்து நிறைந்த பழமாக இருப்பதால் மலச்சிக்கல், செரிமான பிரச்னைகள், உணவுக் குழாயில் உண்டாகும் பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. இரும்பு, மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிரம்பிய பழம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

கறுப்பு பெர்ரிகள்

கோடைகாலத்தில் கிடைக்கும் பழம் மேலும் விலையும் சற்று அதிகம் ஆனால் இது கொடுக்கும் பயன்கள் அற்புதமானது. உடல் பருமன் சீரமைப்பு, கொழுப்பு கரைத்தல் உள்ளிட்ட பயன்கள் கொடுப்பதுடன் செரிமானம், உணவுக்குழாய் சார்ந்த பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். இரத்த சிவப்பு செல்கள் உற்பத்தி, மற்றும் எலும்பு பலம் பெறவும் கறுப்பு பெர்ரிகள் உதவுகின்றன.

மாம்பழம்

கோடையின் ராணி என்று கூடச் சொல்லலாம். மற்ற பழங்கள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படும். ஆனால் மாம்பழம் விட்டால் அடுத்த கோடைகாலம் தான். இயற்கையாகவே மாம்பழங்களில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள், மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலின் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும், மேலும் வெப்பத்தால் உண்டாகும் ஸ்டிரோக் பிரச்னைகளைத் தவிர்க்கவும் மாம்பழங்கள் உதவும்.

– கவின்

The post கோடை பழங்களும் அதன் பயன்களும்! appeared first on Dinakaran.

Related Stories: