ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரி பணியிடங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்

1. Officers in Grade B General (DR): 222 இடங்கள் (பொது-109, எஸ்சி- 25, எஸ்டி-17, ஒபிசி-49, பொருளாதார பிற்பட்டோர்-22). தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
2. Officers in Grade B (DR)- DEPR: 38 இடங்கள் (பொது-14, எஸ்சி-4, எஸ்டி-6, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-3). தகுதி: பொருளியல்/ நிதி/ வணிக பொருளியல்/ வேளாண்மை பொருளியல்/ தொழில் பொருளியல்/ சர்வதேச நிதி/ அளவு தொழில்நுட்பங்கள்/ வங்கி மற்றும் வணிக நிதி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி.
3. Officers in Grade ‘B’ (DR)- DSIM: 31 இடங்கள் (பொது-9, எஸ்சி-8, எஸ்டி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-3). தகுதி: புள்ளியியல்/ கணிதப் புள்ளியியல்/ கணித பொருளியல்/எக்னோமெட்ரிக்ஸ்/ புள்ளியல் தகவலியல்/ பயன்பாட்டு புள்ளியியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.55,200-99,750.

வயது: 1.5.2023 அன்று 21 லிருந்து 30க்குள்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ₹850 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ₹100 மற்றும் 18% ஜிஎஸ்டி. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் ஜூலை 9 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும். www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.6.2023.

The post ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரி பணியிடங்கள் appeared first on Dinakaran.

Related Stories: