பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை 80 சதவீதம் நிறைவு

 

பொள்ளாச்சி, ஜூன் 2: பொள்ளாச்சி -உடுமலைரோடு வழியாக உடுமலை, பழனி, மடத்துக்குளம். ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், திருச்சி, சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. இருப்பினும் நகரங்களில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடியால் குறிப்பிட்ட நேரத்தில், உரிய இடத்துக்கு பயணம் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில், சுமார் 4 ஆண்டுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையேயான 4 வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதுவரை சுமார் 75 சதவீதத்திற்கு மேலான பணிகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், வாகனங்கள் விரைந்து சென்று வர 4 வழிச்சாலை பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை 80 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: