மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பதாக ஏமாற்றிய தம்பதி கைது: போலீசார் நடவடிக்கை

சென்னை: வீட்டை வாடகைக்கு எடுத்து குத்தகைக்கு விடுதல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்தவதாக ஏமாற்றிய மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணவன், மனைவி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் வாழ்க வளமுடன் என்ற யோகா பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளராக லதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த நளினி என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். லதா என்பவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட நளினி, 2022ம் ஆண்டு தனது கணவரான சங்கர் கீழ்க்கட்டளையில் சாய்சன்ஸ் பில்டர்ஸ் என்ற பெயரில் அலுவலகம் வைத்து கட்டுமான தொழில் செய்து வருவதாகவும், ராம்நகரில் சாய் ஷவ்பர்னிகா என்ற பெயரில் 12 வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்ட இருப்பதாக கூறி சங்கர் மற்றும் நளினி ஆகிய இருவரும் மாதிரி வரைபடங்களை லதாவிடம் காண்பித்துள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் சுமார் 887 சதுரஅடியுள்ள எப்-1 என்ற வீட்டை குறைந்த விலைக்கு ரூ.59 லட்சத்திற்கு தருவதாக கூறியுள்ளனர். எனவே முன்பணமாக லதாவிடம் ரூ.35 லட்சத்தை பெற்றுக் கொண்டு வீடு கட்டாமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றுவதாக அவர் புகார் அளித்துள்ளார். மடிப்பாக்கம் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அந்த வீடுகளை வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் பல பேருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை குத்தகைக்கு விட்டு மோசடி செய்ததாக ஏற்கனவே 8 பேர் புகார் அளித்துள்ளனர்.

அந்த வழக்குகளையும் மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் உள்ளது. இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி சங்கர் என்பவரை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் தனது மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் தலைமறைவாகி இருந்த காஞ்சிபுரம் மாவட்டம், வாஞ்சுவான்சேரியை சேர்ந்த சங்கர் (54) மற்றும் அவரது மனைவி நளினி (48) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கடந்த 30ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பதாக ஏமாற்றிய தம்பதி கைது: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: