சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு; ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார்..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடமிருந்து அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கலாகும்போது அதை எதிர்க்க வேண்டும் என கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

அதன்படி, தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலினை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் சந்தித்தார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு பொன்னாடை போர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தார். மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். கெஜ்ரிவால் மற்றும் பகவந்த் மான் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து நெகிழ்ச்சி அடைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெஜ்ரிவால் சந்திப்பின்போது டி.ஆர்.பாலு, கனிமொழி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் உடன் உள்ளனர். நிதிஷ்குமார், கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கெஜ்ரிவால் ஏற்கனவே ஆதரவு கோரியுள்ளார்.

The post சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு; ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஆதரவு கோரினார்..!! appeared first on Dinakaran.

Related Stories: