அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.இது குறித்து அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளதாவது: ஜூன் 7ம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், வருகின்ற 20ம் தேதி, செவ்வாய்க் கிழமை, காலை 9 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும்.

அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

The post அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும்: டிடிவி தினகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: