ஜூலை 9ம் தேதி முதல் நடைபயணம்: அண்ணாமலை பேட்டி

அவனியாபுரம்: தமிழக பாஜ சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 9ம் தேதி நடைபயணம் தொடங்கும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மதுரையில் கூறினார்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பான கருத்தை தமிழக பாஜ தெளிவாக கூறிவிட்டது. மல்யுத்த வீரர்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஏற்க மாட்டேன் என கூறுவது தவறு. ஆனால் கைது செய்தே ஆக வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜ சார்பில் தமிழகத்தில் ஜூலை 9ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளோம்.

6 மாதம் நடைபெறும் இந்த பயணத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்பார்கள். முதல்வர்கள் வெளிநாடு செல்வது வரவேற்கத்தக்கது. முதல்வர் தமிழகத்தை மட்டுமல்ல. இந்தியாவையும் அடையாளப்படுத்த சென்றுள்ளார். நேரு வம்சாவளியில் வந்த ராகுல்காந்தி செங்கோலை அவமானப்படுத்தியுள்ளார். மேகதாது அணை கண்டிப்பாக கட்டப்படும் என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். இவரை எதிர்க்க நாங்கள் அங்கு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜூலை 9ம் தேதி முதல் நடைபயணம்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: