கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகம் சொத்து குவிப்பு அரசு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்துள்ள புகாரை தொடர்ந்து, நேற்று லோக்ஆயுக்தா போலீசார் அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.கர்நாடகா முழுவதும் அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கர்நாடக தொழில் வளர்ச்சி கழக இயக்குனர் நரசிம்மமூர்த்திக்கு சொந்தமான ஆர்.டி.நகரில் உள்ள வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் ரொக்க பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பல வங்கி கணக்கு புத்தகம், துமகூரு மற்றும் பெங்களூருவில் இருக்கும் வீடு உள்ளிட்ட கட்டிடங்களுக்கான ஆவணங்கள் உள்பட அசையும் மற்றும் அசையா சொத்துகள் பறிமுதல் செய்தனர்.

மைசூரு மாவட்ட லோக்ஆயுக்தா போலீசார் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக பணம், நிலம் வாங்கி குவித்துள்ளதற்கான பட்டாக்கள், விலையுர்ந்த கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்தனர். பெங்களூரு கோடிகெஹள்ளி கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரங்கசாமி வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.7 கோடி மதிப்பிலான வீடு, ரொக்கப்பணம், கிலோ கணக்கில் தங்க, வைர, வெள்ளி ஆபரணங்கள், 7 கார்கள், பல கோடி மதிப்பிலான நிலம் உள்ளதற்கான பட்டாக்கள், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், சொகுசு வீடுகள் என பல கோடி சொத்து சேர்த்திருப்பதை பார்த்து லோக்ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

The post கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகம் சொத்து குவிப்பு அரசு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு: கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: