இலங்கைக்கு மேலும் ஓராண்டு இந்திய கடன் உதவி நீட்டிப்பு

கொழும்பு: இலங்கைக்கு ரூ. 82.67 லட்சம் கோடிக்கான கடன் உதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கைக்கு ரூ. 82.67 லட்சம் கோடி இந்தியா கடனுதவி அளிப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தானது. இந்த கடனுதவி திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு இந்தியா நீட்டித்துள்ளது. இதற்கான ஒப்பதங்களில் இருநாட்டு அமைச்சர்களும் கையெழுத்திட்டுள்ளனர். இதுதொடர்பாக காணொலி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை நிதித்துறை உயரதிகாரிகள், இந்திய அதிகாரிகள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post இலங்கைக்கு மேலும் ஓராண்டு இந்திய கடன் உதவி நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: