2.7 கோடி முன்பதிவு ரத்து ரயில் டிக்கெட் எப்போது அனைவருக்கும் கிடைக்கும்? சசிதரூர் எம்பி கேள்வி

புதுடெல்லி: ரயிலில் இருக்கை வசதி எப்போது அனைவருக்கும் கிடைக்கும் என்று சசிதரூர் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவரின் மனுவுக்கு ரயில்வே வாரியம் அளித்த பதிலில், 2022-2023ம் ஆண்டு 1.76கோடி பயணிகளின் பெயர் பதிவு எண்(பிஎன்ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த 2.72கோடி பயணிகளின் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2021-2022ம் ஆண்டில் 1.65கோடி பயணிகளின் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதனை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் கூறுகையில், ‘‘இந்திய ரயில்வேயின் நீண்ட காத்திருப்பு பட்டியல் எப்போது முடிவுக்கு வரும். காத்திருப்பு பட்டியலில் உள்ள 2.7கோடி பயணிகளுக்கு இருக்கை மறுக்கப்பட்ட நிலையில் தானாக ரத்தாகியுள்ளது. காத்திருப்பு பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுக்கள் அந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டு சாதனையை முறியடிப்பதன் மூலமாக இதுவே டிரெண்ட் ஆகி வருகிறது. வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. நமது நாட்டின் 75வது ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில்வே இருக்கை கிடைப்பது அதிர்ஷ்டமாக இல்லாமல் சாதாரண வசதியாக இருக்க வேண்டும்” என்றார்.

The post 2.7 கோடி முன்பதிவு ரத்து ரயில் டிக்கெட் எப்போது அனைவருக்கும் கிடைக்கும்? சசிதரூர் எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: