கேலோ இந்தியா போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு சிலம்ப கழகம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சிலம்பக்கழக பொதுக்குழு கூட்டம் சென்னை போரூர் கண்ணப்பர் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தலைவர் சி.எம்.சாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.முருகக்கனி, பொதுசெயலாளர் அகத்தியா அ.ஞானம், பொருளாளர் எஸ்.ஜே.அருண்கேசவன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு சிலம்பக்கழக புரவலர் எம்.வி.எம்.வேல்முருகன் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரம் தமிழ்நாடு சிலம்ப கழகத்திற்கு தரவேண்டும்.

முதல்வர் கோப்பைக்கான மாநில சிலம்ப போட்டியை வெளிப்படைதன்மையுடன் சிறந்த நடுவர்களை வைத்து நடத்தவேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஏற்பாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அந்த போட்டியில் சிலம்பத்தை கட்டாயம் சேர்க்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில், பல்வேறு அமைப்பை சார்ந்த சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சங்கத்தின் கணக்கு தணிக்கையாளர் கோபால் ஆசிரியர் நன்றி கூறினார்.

The post கேலோ இந்தியா போட்டியில் சிலம்பம் இடம்பெற வேண்டும்: தமிழக அரசுக்கு சிலம்ப கழகம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: