சென்னை மாநில கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: சென்னை மாநில கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. நேற்று முதல் நாள் நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற 643 மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். நாளை மறுநாளில் இருந்து மதிப்பெண் அடிப்படையில் திறந்த பிரிவு கலந்தாய்வு நடைபெறும்.

ராணி மேரி கல்லூரியில் 77 சிறப்புப் பிரிவு இடங்களுக்கு 1,353 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் காரணமாக மகளிர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார். பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி பாடப்பிரிவு கண்டிப்பாக இருக்கும் என்றும் ஆளுநர்கள் சில கட்டுப்பாடுகளோடு நடந்து கொள்வது நல்லது எனவும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டார்.

The post சென்னை மாநில கல்லூரியில் சேர 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: