மதுரை: மேலூர் அருகே புலிப்பட்டியில் தொல்பழங்குடி மக்களின் குகைகள், குகை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலி மலையில் மனித உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் என 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஓவியங்கள் 2100 ஆண்டுகள் பழமையானவை என கருதப்படும் நிலையில் ஆய்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.