இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

சென்னை: என்விஎஸ் 01 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2ம் தலைமுறையை சேர்ந்த என்விஎஸ் 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6வது ஜிஎஸ்எல்வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு. மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கடுமையான உழைப்பையும் முயற்சிகளையும் மேற்கொண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன்.

The post இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: