ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்: மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய செயலாளர் கே.நாராயணா பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்து பேசினார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாடு அரசின் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. இதற்காக அற்ப காரணங்களை கூறி உள்ளது. இவை ஏற்கதக்கது அல்ல. எனவே, 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதை நிறுத்துமாறும், கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி, சென்னை, திருச்சி, தர்மபுரி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்: மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: