என்.வி.எஸ் – 01 செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி – எப்12’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: 19 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகள் சாதனை

சென்னை: என்.வி.எஸ் – 01 செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி – எப்12’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. அடுத்த 19 நிமிடங்களில் அதன் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தரைவழி, கடல் வழி, வான்வழி போக்குவரத்து பாதுகாப்புக்காகவும், அதனை கண்காணிக்கவும், இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்) உள்ளது. இதனுடன் இஸ்ரோ இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2013ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு காலகட்டங்களில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ, 1பி.1சி, 1டி, 1இ, 1 எப் மற்றும் 1 ஜி என 7 செயற்கைக்கோள் வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டன.

இந்நிலையில், ஐ.அர்.என்.எஸ்.எஸ் – 1ஜி செயற்கைக்கோளுக்கு மாற்றாக என்.வி.எஸ்- 01 பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து வழிகாட்டி செயற்கைக்கோளான என்.வி.எஸ்.01 செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி – எப்12 ராக்கெட் மூலமாக நேற்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும், விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடங்களில் என்.வி.எஸ்- 01 செயற்கைக்கோள் புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் பூமியில் இருந்து 251.52 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது. இதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கைகளை கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

என்.வி.எஸ்.01 செயற்கைக்கோளின் அம்சங்கள்: என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடையும் கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. இந்த செயற்கைக்கோள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஏ, 1பி.1சி, 1டி, 1இ மற்றும் 1 எப் செயற்கைக்கோள்களுடன் இணைந்து செயல்படும்.

செயற்கைக்கோள் பயன்கள்: செயற்கைக்கோள் தரை வழி, கடல் வழி, வான்வழி கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவல்களை தெரிவிக்கும். வேளாண் சார்ந்த நிகழ்வுகள், அவசர கால சேவைகள், மீனவர்களுக்கான வழித்தடங்கள் கண்காணித்தல் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும். அதே போல, இந்திய எல்லைக்கு அப்பால் 1500 கிலோ மீட்டர் வரை கண்காணிக்கும் திறன் வாய்ந்தது.

* என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.
* எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளன.
* செயற்கைக்கோள் தரை வழி, கடல் வழி, வான்வழி கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவல்களை தெரிவிக்கும்.
* இந்திய எல்லைக்கு அப்பால் 1500 கிலோ மீட்டர் வரை கண்காணிக்கும் திறன் வாய்ந்தது.

The post என்.வி.எஸ் – 01 செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி – எப்12’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: 19 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: