இயற்கை அழகு

* பீட்ரூட்டை தோல் சீவி துருவி, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுது ஒரு தேக்கரண்டியுடன் பார்லி பவுடர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு அரை தேக்கரண்டி சேர்த்து கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து அலம்பினால் முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
*உலர்ந்த பொன் ஆவாரம் பூவை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பவுடர் ஒரு தேக்கரண்டியுடன் கடலைமாவு அரை தேக்கரண்டி கலந்து முகத்துக்கு பேக் போட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இதைச் செய்து வர பதினைந்து நாட்களில் கன்னத்தில் ஏற்பட்ட கருமையும், புள்ளிகளும் மறைந்து முகம் பொலிவுடன் காணப்படும்.
*முகம் மிருதுத் தன்மையை கொடுப்பதில் கீரைச் சாறுக்கு இணையில்லை. துளசி, வெந்தயக்கீரை, கற்பூரவல்லி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வாரம் ஒரு முறை ஐந்தாறு இலைகளை கைகளால் கசக்கி அந்த சாறை முகத்தில் தடவ வேண்டும். முகம் மிருதுவாகி பிரகாசிக்கும்.
* நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இவர்களுக்கு இந்த சிறப்புச் சிகிச்சை தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் தேக்கரண்டி ரவையைக் கலந்துகொள்ள வேண்டும். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவவும். அடிக்கடி இதைச் செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும்.
*முகச்சருமம் மிருதுத் தன்மை பெற ஒரு தக்காளியை கூழாக்கவும். இதனுடன் அரைத் தேக்கரண்டி தயிரைக் கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் மிருதுத்தன்மை மாறாமல் இருக்கும். தொடர்ந்து செய்துவர இயற்கையான பளிச் முகம் சொந்தமாகும்.
– ஆர். ஜெயலெட்சுமி.

The post இயற்கை அழகு appeared first on Dinakaran.

Related Stories: