ஸ்ரீஹரிகோட்டா: என்.வி.எஸ்.-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை என்விஎஸ் -01 செயற்கைகோள் கண்காணிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர், எஃப் 10 ஜி.எஸ்.எல்.வி. செலுத்தியபோது ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டு ராக்கெட் செலுத்தப்பட்டது. கிரையோஜனிக் கட்டத்தில் மேற்கொண்ட சீரமைப்பு பணியால் தற்போது வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி ராக்கெட் செலுத்தப்பட்டுள்ளது.
தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் மூலம் நம்பகமான முறையில் ஜிஎஸ்எல்வி தற்போது நம்மால் தயாரிக்க முடிந்தது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2-வது தலைமுறையை சேர்ந்த வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தற்போது செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளில் நவீன வசதிகளுடன் அணுசக்தி கடிகாரமும் செலுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தும் பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி என கூறினார்.
The post என்.வி.எஸ்.-01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்; விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறினார் இஸ்ரோ தலைவர்..!! appeared first on Dinakaran.