நாடாளுமன்றத்தில் செங்கோல் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்துள்ளது: தமிழிசை கருத்து

சென்னை: ‘நாடாளுமன்றத்தில் தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டுள்ளது தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்துள்ளது’ என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கை: நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதன் முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடை சூழ பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும், தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் செங்கோல் தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் வரலாற்று புகழ் சேர்த்துள்ளது: தமிழிசை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: