கலைஞர் பிறந்தநாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க சங்கிலி: திமுக வர்த்தகர் அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலி அணிவிக்கப்படும் என திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் திண்டுக்கல் வி.ஜெயன், எஸ்.முத்துச்செல்வி, நா.முருகவேல், பி.டி.பாண்டிச்செல்வம், மீஞ்சூர் பாஸ்கர் சுந்தரம், வெ.பல்லவி ராஜா, சேப்பாக்கம் வி.பி.மணி, பழஞ்சூர் கே.செல்வம், வேப்பூர் வி.எஸ்.ெபரியசாமி, என்.தாமரை பாரதி, மதுரை க.தனசெல்வம், ஆந்திர மாநிலச் செயலாளர் ஜெயராமன் மற்றும் ஏ.விஜயராஜ் ஆகியோர் கலந்து்கொண்டனர்.

வரும் ஜூன் 3ல் கலைஞர் பிறந்தநாளில், மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கச் சங்கலி, பரிசு பெட்டகம் வழங்க இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்கிட, புதிய வேலைவாய்ப்புகளை பெருக்கிட, மேலைநாடுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்திடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. அரசியல் செய்வதற்காக சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதும், தமிழக காவல்துறைக்கு தகவல்கள் ஏதும் கூறாமல், அனடயாள அட்டையினை காட்டாமல் அவதூறுகளுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அரசின் அதிகாரிகளின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது உள்பட 10 தீர்மானங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

The post கலைஞர் பிறந்தநாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க சங்கிலி: திமுக வர்த்தகர் அணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: