இன்ஸ்டா பைத்தியம் சும்மா இருக்க விட மாட்டேங்குது…10 ரூபாய்க்காக நடுரோட்டில் குளித்த வாலிபர்

ஈரோடு: ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு எப்போதும் பரபரப்புடன் காணப்படும். நேற்று வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து ஸ்கூட்டரில் வந்த வாலிபர் ஒருவர், சிக்னலில் நின்றார். பின்னர், ஸ்கூட்டரின் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் இருந்து மக்கில் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளிக்க துவங்கினார். இதனை அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். தொடர்ந்து நண்பர்களும் வாலிபரை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினர்.

இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடுரோட்டில் குளித்த வாலிபர் வெள்ளோட்டை சேர்ந்த பாரு (26) என்பதும், அவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் அளிக்கும் சவால்களை ஏற்று செயல்படுவது வழக்கம், அதன்படி, ஒருவர் நடுரோட்டில் குளித்தால் 10 ரூபாய் தருவதாக சவால் விட்டுள்ளார். அதை ஏற்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் குளித்து, சவாலுக்கானரூ.10ஐயும் பாரு பெற்றார் என்று கூறினர். இதேபோல், சமீபத்தில் தஞ்சையில் சாலையில் ஸ்கூட்டரில் சென்றபடி குளியல் போட்டு வீடியோ எடுத்த இருவருக்கு தலாரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களின் மீதான மோகம், லைக்ஸ் மற்றும் பாலோவர்சுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான, சட்ட விரோதமாக மற்றும் முகம் சுழிக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post இன்ஸ்டா பைத்தியம் சும்மா இருக்க விட மாட்டேங்குது…10 ரூபாய்க்காக நடுரோட்டில் குளித்த வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: