பைக்கில்ரூ.22 லட்சம் ஹவாலா பணம்

ஒடுகத்தூர்: பைக்கில் கொண்டு வரப்பட்டரூ.22 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அகரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வேப்பங்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் சூட்கேசுடன் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகத்தில் சூட்கேசை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாகரூ.500 நோட்டுகள் இருந்தது. பைக்கில் வந்த வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த இலியாஸ் என்ற வாலிபரையும், அவரது நண்பரையும் பிடித்து விசாரித்தபோது, நகை கடைகளில் வசூல் செய்த பணம் என்று கூறினர். ஆனால் ஆவணங்கள் இல்லை. இதனால் ஹவாலா பணமாக இருக்கலாம் என கருதி போலீசார்ரூ.22 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 

The post பைக்கில்ரூ.22 லட்சம் ஹவாலா பணம் appeared first on Dinakaran.

Related Stories: