நேரு பற்றி கருத்து: கவர்னருக்கு காங்கிரஸ் கண்டனம்

சென்னை: முன்னாள் பிரதமர் நேருவை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு விடுதலை பெற்ற போது, ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை பிரதமர் நேருவிடம் வழங்கியதாக திட்டமிட்டு ஆதாரமற்ற செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதை ராஜாஜியினுடைய பேரன் ராஜ்மோகன் காந்தி முற்றிலும் மறுத்திருக்கிறார். இதுகுறித்து கருத்து கூறிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தேவையில்லாமல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இந்திய மக்களின் பாரம்பரிய பண்பாடு குறித்து சரியான புரிதல் இல்லை என்று கூறிய கவர்னர் ரவியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

The post நேரு பற்றி கருத்து: கவர்னருக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: